
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் அமிட்டி பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு டப்பஸ் என்பவர் எல்எல்பி படித்து வருகிறார். இவர் இபிஷா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு பிரேக் அப் செய்ததால் காதலி பிரிந்து சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று டப்பஸ் ஒரு பார்ட்டிக்கு சென்றார். அப்போது அவரது முன்னாள் காதலியும் தோழியும் இருந்தனர். இந்த நிலையில் டப்பஸ் தனது காதலியிடம் மீண்டும் தன்னுடன் இணையும் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு காதலி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் விடாமல் பார்ட்டியில் வைத்து மீண்டும் அவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் காதலி திட்டவட்டமாக மறுத்ததால் டப்பஸ் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.