ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் சரிபார்த்து ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் வருடத்தில் நடைபெறும் ஆந்திரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய நீங்கள் உங்களது ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் ஹால் டிக்கெட் நம்பரை உள்ளிடவும். ஆந்திரபிரதேசத்தில் காலியாகவுள்ள கிட்டத்தட்ட 6100 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வை ஜனவரி 22, 2023 அன்று நடத்த திட்டமிட்டு உள்ளது.