கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த இரட்டையர்கள், அசைனார் (21) மற்றும் உசேன், இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அசைனாரின் கவனம் 20 வயது இளம்பெண் ஒருவரின் மீது விழுந்தது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதே இளம்பெண்ணை உசேனும் நோக்கினார். பார்வை, நடத்தை போன்ற அம்சங்களில் இரட்டையர்களின் ஒரே மாதிரித்தனம், இளம்பெண்ணை குழப்பத்தில் ஆழ்த்தியது. இருவரிடமும் காதல் வலையில் சிக்கிய அந்த இளம்பெண், இரட்டையர்கள் மாறி மாறி வீடியோ கால் மூலம் பேசியதை குறித்தே உணராமல் இருந்தார்.
ஒரு நாள் அசைனார், வீடியோ காலில் பேசும் போது, “நாம் திருமணம் செய்யப்போகிறோமே, நிர்வாணமாக வரவேண்டும்” எனக் கேட்டதற்கு காதல் மனநிலையில் இருந்த அந்த இளம்பெண் அதற்கும் இணங்கினார். அசைனார், அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்டு பின்னர் இரட்டையர்களும் அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கினர்.
அந்த பெண் அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் நிர்வாண வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசைனார் மற்றும் உசைன் ஆகிய 2 போரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.