மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா பகுதியில் புதிதாக ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசியதாவது, நாம் கையால் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிக்க வேண்டும். அதுதான் இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

தபால் நிலைய தொழில்நுட்ப செய்திகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 6000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் அதன்படி 534 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் திறக்கப்படும். மேலும் இது தொடர்பான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.