மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு நகை கடன், 16 ஆயிரம் கோடிக்கு பயிர் கடனும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்க கடன் வழங்குமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இந்த கடன் வழங்கப்பட உள்ளது.