இருசக்கர வாகனத்தில் செல்வது பலருக்கும் பிடித்தமானது என்றாலும், நாம் சாலையில் போகும்போது தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நம்மை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும்.
தற்போது நீங்கள் பைக் ஓட்டும் போது செய்யக்கூடாத சில விஷயங்களை நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, உரிய பாதுகாப்பு கியர் இன்றி பைக் ஓட்டும் தவறை நீங்கள் எப்போதும் செய்துவிடாதீர்கள்.
அவ்வாறு பாதுகாப்பு கியர் இன்றி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்வது உங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல் சாலையில் போகும் மற்ற உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன்பின் பல ஹெல்மெட்டுகள் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் இணைப்பு ஆப்ஷன்களுடன் வருகிறது. இதற்கிடையில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இசை ஒரு சிறந்த துணையாக இருக்கும்.
எனினும் நீங்கள் குறைந்த அளவில் சத்தத்தை வைத்து கேளுங்கள். அதேபோல் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் போது வாகனத்தை ஓட்டுவது நாம் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாகும். பயணம் மேற்கொள்வதற்கு முன்பு உங்களது இருசக்கர வாகனத்தின் டயரில் போதுமான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். எப்போதும் சாலையில் போகும்போது நிதானமாக செல்லுங்கள். மற்றவரை முந்திச்செல்ல நினைக்கக்கூடாது.