தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் ரஜினி தனது பேரன்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். ரஜினி தனது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வேட்டி சட்டையில் பொங்கலை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.