ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய குஜராத்த அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாகியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆக செயல்பட்டு வந்த ஷிகர் தவான் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாததால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஷாம் கரன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இவரை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இவர் தொடக்க வீரராக களமிறங்கி ஆடிவரும் நிலையில் இதுவரை எந்த போட்டியிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நான் மட்டும் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்திருந்தால் ஷாம் கரனை அணிக்குள் எடுத்திருக்க மாட்டேன் என விமர்சித்துள்ளார். அதாவது கொஞ்சமாக மட்டும் பந்து வீசி விட்டு பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரர்களால் எந்த ஒரு பயனும் கிடையாது என்பதால் அவரை அணியின் எடுத்திருக்கவே மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் சரியாக பந்தும் வீச முடியவில்லை, பேட்டிங்கும் செய்ய முடியவில்லை. ஒன்று பந்து வீசி வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பேட்டிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.