கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு இந்த விசாவின் கால வரம்பை நீட்டிக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.