முருகா அசோக், காயத்ரி நடிப்பில் “விழித்தெழு” என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை ஏ.தமிழ்ச் செல்வன் இயக்க, சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ளார். இந்த பட விழா நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பங்கேற்று பேசியதாவது “தமிழன் இன்று விழிப்பாக இருக்க வேண்டிய காலம் ஆகும். தமிழகம் என்றாலும் வாழ்க என்று கூற வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு என்றாலும் வாழ்க என்று தான் கூறவேண்டும். தமிழ் அரசியலில் தமிழன் சிக்கிக்கொள்ளக்கூடாது. நான் நிறைய சிறிய பட்ஜெட் பட விழாக்களில் பங்கேற்கிறேன். இன்று பெரிய திரைப்படங்களால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது சிறுபட்ஜெட் படங்களை வெளியிட இயலாது. பெரிய படங்கள் திரைக்கு வரும் போது இசை வெளியீட்டு விழாக்களை கூட நடத்தக் கூடாதா?” என்று அவர் பேசினார்.