வசந்தபாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ இணையத் தொடர் வரும் 17-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல்தான். நீ என்ன சாதி என்று கேட்காமல் இருப்பதே அரசியல்தான் என்று நினைக்கிறேன். இந்தக் களத்தை பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸில் உருவாக்கியுள்ளது என கூறியுள்ளார்.