அவதூறாக பேசிய திமுக பேச்சாளரை நீக்கியது மட்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் மீது எனது நடவடிக்கை தொடரும் என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே அவதூறாக பேசுவது அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகிறது.

எந்த ஒரு பெண்ணை பற்றியும் பேச எந்த கட்சிக்கும், ஆண்களுக்கும் உரிமை கிடையாது. என்னை பற்றி யார் அவதூறாக பேசினாலும் சரியான பதிலடி கொடுப்பேன். எல்லா கட்சியும் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.