தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக புஷ்பா 2 வெளியானது. இந்த படம் கடந்த 6-ம்‌ தேதி வெளியான நிலையில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ள நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் வில்லன்களை கடித்தே ஓட விடுவார்.

இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரசிகரின் காதை ஒருவர் கடித்து துப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த தியேட்டரில் கேண்டீன் நடத்தி வருபவரிடம் தியேட்டரில் படம் பார்க்க வந்த ஷபீர் என்பவர் ஸ்னாக்ஸ் வாங்கியுள்ளார். அப்போது அதன் விலைக்காக அவர் அவரிடம் தகராறு செய்தார். இதனால் கேண்டீன் ஓனர் ராஜு தன்னுடைய கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து சபீரின் காதை கடித்து அவரை அடித்துள்ளார். மேலும் புஷ்பா படம் பார்த்து  அதேபோன்று ரசிகரின் காதை ஒருவர் கடித்து துப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.