புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள் அடைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களில் சாலைகளில் விநாயகர் சிலைகளை பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் எனவும் அப்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்று மது கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.