ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை தொடர வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமன் பத்ரா என்ற ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதம் ஆகும். இந்த சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் வழங்கும் ஆணையம் ஓய்வூதிய தொகையை உங்களுக்கு அனுப்பாது. எனவே ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.

முதலில் ஓய்வூதியம் பெறும் நபர் தனது ஆயுள் சான்றிதழை ஜீவன்பிரமன் போர்ட்டல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையங்களுக்கு சென்று அப்ளை செய்யலாம்.

ஓய்வூதியம் பெறுவோர் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் மையங்களை பயன்படுத்தி தங்களுடைய ஆயுள் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

அடுத்ததாக உமாங் செயலி மூலமாக சமர்ப்பிக்கலாம்.

வங்கிகளும் அதன் ஆன்லைன் ஆதார் போர்ட்டல்களை கொண்டிருப்பதால் அதன் மூலமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய சான்றுகளுடன் உள்நுழைந்து பிரத்தியேக பிரிவின் மூலம் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் epfo போர்ட்டல் பயன்படுத்த முடியும்.

மேலும் ஓய்வூதியம் பெறுவோர் வீட்டு வாசலில் வங்கி சேவையோ அல்லது தபால்காரர் மூலமாக இந்த சேவையை தேர்வு செய்ய முடியும்.