புதிய தொழில் தொடங்குதல், புதிய தொழில் பிரிவுகள் அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தொழில் பிரிவுகள் கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இதற்காக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் ஒரு தொழிற் பள்ளி ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது.
இதற்கு விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழில் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஜனவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதே போல் அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணமாக ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ.8000 ஆர்.டி.ஜி.எஸ் அல்லது எம்.இ.எப்.டி மூலம் செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.