நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருடைய வீட்டினை என்ற பெரியார் அமைப்பினரும் மற்றும் மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட முயன்றனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் தன்னுடைய வீட்டில் காரில் இருந்தபடி சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ எடிட் செய்ததா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, அந்த போட்டோவை எத்தனை பேர் எடிட் பண்ணாங்க. நீங்க எல்லாம் என்ன பெரிய எடிட்டரா. சும்மா காமெடி பண்ணாதீங்க. 15 வருஷமா நீங்க எங்க போனீங்க. அந்த போட்டோ முதல் முறையாக வெளியான போதே நீங்கள் சொல்லி இருக்க வேண்டியதுதானே. ஒருவேளை அந்த போட்டோ வெட்டி ஒட்டியது என்றால் அதற்கான ஆதாரத்தை முதலில் நீங்கள் காட்டுங்கள். நானும் பெரியாரைப் பற்றி பேசியதற்கான ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுகிறேன் என்றார். மேலும் பெரியாரா பிரபாகரனா என்று ஆகிவிட்டது மோதி பார்த்திட வேண்டியதுதானே என்று கூறினார்.