மின்சார சிக்கனம் மற்றும் மின் கட்டண சிக்கனத்திற்காக மக்களை ஆயத்தப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிஎம் சூர்யாகர் இலவச மின்சார திட்டம் என்பது நம்முடைய லாபத்தை இரட்டிப்பாக்கும். இந்த திட்டத்தின் மூலமாக வீட்டின் மின்கட்டணம் பூஜ்ஜியம் ஆகிவிடும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூறையில் சோலார் பேனர்கள் பொருத்துவதற்காக அரசு சார்பில் 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

உங்களுக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீதமுள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்கவும் வழிவகை செய்கின்றது. இதன் மூலமாக மின்சார கட்டணம் நாம் செலுத்த தேவை இருக்காது. உங்களுக்கும் இதன் மூலமாக வருமானம் கிடைக்கும். இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://pmsuryaghar.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.