தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் வருடம் வெளியாகிய திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து பிச்சைக்காரன் படத்தின் 2-ஆம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து இருந்தார்.

இப்படம் கடந்த மே மாதம் 19-ம் தேதி ரிலீஸ் ஆகி தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவித்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் 3-ம் பாகம் 2025-ஆம் வருடம் தொடங்கவுள்ளது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.100 கோடி என சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.