
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐசிசி தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பிசிசிஐக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி பிசிசிஐ செயலாளராக தேவஜித் சைகியா பொறுப்பேற்றுள்ளார். இவர் பிசிசிஐ சிறப்பு குழு பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பொருளாளராக பிரேப்தேஜ் சிங் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் தேவஜித் சைகியா அசாமை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர். மேலும் இவர் அசாம் கிரிக்கெட் சங்க துணை செயலாளராகவும், கடந்த 2022-ஆம் ஆண்டு பிசிசிஐ இணை செயலாளர் ஆகவும் பணியாற்றியுள்ளாராகவும பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.