குஜராத் மாநிலத்தில் ஒரு வங்கியின் மேனேஜருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெயமன் ராவல் என்ற வாடிக்கையாளர் வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கியுள்ளார். இவர் தன்னுடைய கணக்கில் அதிக வரி பிடித்தம் செய்ததால் ஆத்திரத்தில் வங்கி மேனேஜருடன் தகராறு ஈடுபட்டுள்ளார். வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் வாடிக்கையாளர் மேனேஜரை சரமாரியாக தாக்கிய நிலையில் அதை தடுக்க முயற்சித்தும் அவர் கேட்கவில்லை.

இந்த சம்பவம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூர் யூனியன் வங்கி கிளையில் நடந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போன்று ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையிலும் ‌ நடந்துள்ளது. அதாவது வாடிக்கையாளர் ஒருவர் சிபில் ‌ ஸ்கோர் தொடர்பாக வங்கியில் உள்ள ஒரு பெண் ஊழியரிடம் தகராறு செய்வதும் அந்த பெண்ணின் செல்போனை இப்படி இங்கு வீசுவதும் ஆன செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.