ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் passportindia.gov.in/என்ற இணையதள முகவரிக்கு சென்று Register now என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு passport office என்பதை தேர்வு செய்து register to apply at என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்தை passport office என்பதை கிளிக் செய்து தேர்ந்தெடுத்து given name என்ற இடத்தில் உங்களின் பெயரையும் surname என்ற இடத்தில் குடும்ப பெயரையும், அடுத்து பிறந்த தேதியையும் பதிவிட வேண்டும்.
பிறகு உங்கள் இமெயில் ஐடியை பதிவிட்டு அதே இமெயில் ஐடியை உங்களுடைய லாகின் ஐடியாக வைத்துக்கொள்ள விரும்பினால் அதையே தேர்ந்தெடுக்கலாம். அடுத்ததாக செலக்சன் அப்ளிகேஷன் டைப் என்பதில் பாஸ்போர்ட் என்பதை தேர்ந்தெடுத்து டைப் ஆப் சர்வீஸ் என்பதில் புதிய பாஸ்போர்ட் என்பதை குறிக்க fresh என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தடுத்து கேட்கும் விவரங்களை நிரப்பி 36 பக்க பாஸ்போர்ட் வேண்டுமா அல்லது 60 பக்கம் பாஸ்போர்ட் வேண்டுமா என்பதை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பின்னர் appointment availability என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தையும் தேதியையும் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அந்த விண்ணப்ப அடிப்படையில் வீட்டுக்கு காவல்துறை சார்பாக விவரம் சரிபார்க்கப்படும். அது முடிந்ததும் பாஸ்போர்ட்டுக்கு ஒப்புதல் கிடைத்த வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.