தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், நேற்று படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்று ஆரம்பிக்கும் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.

இந்த பாடலை கார்கி எழுதியுள்ளார். இந்த பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் ஆடுவது மிகவும் எனர்ஜிடிக்காக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.