இந்தோனேசியாவை சேர்ந்த சிரேகர் (45) என்பவர் அண்டை வீட்டில் வசித்து வரும் அசிம் இரியாண்டோ(60) என்ற முதியவர் ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த முதியவர் இவரை பார்க்கும் போதெல்லாம் எப்போது திருமணம் என்று கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரேகர் கையில் கட்டையுடன் சென்று அந்த முதியவரை சாலையில் ஓட ஓட தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை எடுத்து கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விசாரித்த போது அவர் என்னை கேலி செய்ததால் கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.