கர்நாடக மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பாஜக நீக்கியது.

கட்சிக்கு தர்மசங்கடமாக மாறியதோடு, ஒழுக்கமின்மையால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்த 6 ஆண்டுகள் அவர் பாஜகவில் செயல்பட முடியாது என கூறப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.