
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி பேசியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் சீமான் சொன்னது உண்மைதான் அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது என்றார். தற்போது இது தொடர்பாக தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நாங்கள் இவ்வளவு காலமாக எந்த கருத்தை கூறி வந்தோமோ தற்போது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எங்கள் கருத்தை ஏற்கும் விதமாக சீமான் பேசியுள்ளார். இது எங்களுக்கு ஒரு பலமாகவும் நாங்கள் இதுவரை என்ன கருத்துகளை சொல்லி வந்தோமோ அதற்கு ஆதரவாகவும் இதை எதிர்பார்க்கிறோம்.
இது பாஜக கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நான் அடிக்கடி கூட்டத்தில் சொல்வது போன்று இது அண்ணா வளர்த்த தமிழ் கிடையாது ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்று. தற்போது அண்ணன் சீமான் நாங்கள் பெரிய புராணம் படிக்கும்போது உங்களுக்கு பிடிக்கவில்லை பெரியார் புராணம் படிக்கும்போது உங்களுக்கு பிடிக்குதா என்று கேட்டார். இப்படி நாங்கள் என்ன சொன்னமோ அதை தொடராக தொடர்வது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் இப்படி பேசும்போது அவர்களை பாஜகவின் ஏடிடீம், பீடீம் மற்றும் இசட் டீம் வரைக்கும் கொண்டு சேர்க்கிறீர்கள். மேலும் இதற்காக சீமானை எங்களுடைய டீம் என்று கூற முடியாது. வேண்டுமானால் Theme partner என்று வேணால் கூறலாம் என்றார்.