
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட் என்றும் தமிழ்நாட்டுக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் தொடர்ந்து கூறும் போது, பாஜகவின் ஆஸ்தான அடிமை எடப்பாடி பழனிச்சாமியால் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட். முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ நிதி கேட்ட போதிலும் ஒன்றிய அரசு அதனை நமக்கு ஒதுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நிருபர்கள் சென்று அதைப் பற்றி கேட்டனர். அதற்கு அவர் இது ஒரு மாயாஜால பட்ஜெட் என்று கூறினார். இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஏனெனில் பட்ஜெட்டை புகழ்ந்தால் தமிழக மக்கள் ரைடு விடுவார்கள். ஒருவேளை விமர்சித்தால் பாஜக ரெய்டு விடும். இதனால்தான் அவர் மாயாஜால பட்ஜெட் என்று கூறியுள்ளார். இதனை நாம் வஞ்சப்புகழ்ச்சி என்றும் கூறலாம். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் GDPவளர்ச்சி என்பது நம் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு என்று எந்தவிதமான திட்டங்களையும் ஒதுக்கவில்லை என்று கடுமையாக பேசியுள்ளார்.
மேலும் செங்குன்றத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவின் அடிமை என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.