தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடலுக்காக சமீபத்தில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு ராஜமவுலி ரமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது எஸ்.எஸ் கார்த்திகேயா என்ற மகனும், எஸ்.எஸ் மயூகா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.