ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர்  கேரி கிறிஸ்டன் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. பொதுவாக நீங்கள் உங்களை ஒரு அணி என்று சொல்வீர்கள். ஆனால் பாகிஸ்தான் ஒரு அணியே  கிடையாது.

ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்காததோடு தனித்தனியே பிரிந்துள்ளனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எந்த அணியிலும் பார்த்ததில்லை. எந்த நேரத்தில் எந்த மாதிரி ஷாட்டை அடிக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே இனி அந்த இடங்களுக்கு முன்னேற்பவர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் கேரி கிறிஸ்டன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.