தமிழகத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் கைபேசி செயலி மற்றும் இணைய பயன்பாடு உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் இடை நிற்றலுக்கான காரணங்களின் அடிப்படையில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்,மீண்டும் சேர்க்க தேவையில்லாத மாணவர்கள் மற்றும் விபரங்கள் சரிபார்க்கப்பட வேண்டியவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிந்து செயலியில் ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும். மேலும் 6 முதல் 18 வயதுடைய இடைநன்ற குழந்தைகள் மற்றும் இடை நிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும். அதனைப் போலவே பத்து முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளவர்களில் இடை நின்ற மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.