தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்ஜூன். இவர் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார். ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனனுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் தம்பிராமையாவின் மகனும் நடிகருமான உமாபதிக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு நடிகர் அர்ஜுன் திருமண பரிசாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொடுத்ததாக தற்போது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. குறிப்பாக ரூ.500 கோடியை பரிசாக வழங்கியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் நடிகர் அர்ஜுனுக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக கூறப்படும் நிலையில் அதில் பாதியை தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.