மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம் மற்றும் குஜராத் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு தகவலளித்தனர்.

அதனை தொடர்ந்து ஜாம் நகர் விமான நிலையத்தில் பிரத்யேக பகுதியில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. வழித்தடத்தில் இருந்து விமானம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விமான நிலைய காவல்துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்தனர். இவ்வாறு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..