சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாகவே விமர்சித்து விஜய் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். பரந்தூர் விமான நிலைய திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்த திட்டமாக இருப்பினும் மாநில அரசு அதனை செயல்படுத்த முயற்சிக்கு வருகிறது. இதற்கான நிலங்களை கையகப்படுத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
ஏனெனில் விவசாய நிலங்கள் அழியும் என்பதால் பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதோடு விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்புக்காக சட்டரீதியாக போராட கூட தயங்க மாட்டோம் என்று விஜய் கூறியுள்ளார். மேலும் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.