தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக இருக்கிறேன். ஆனால் அதே  தீர்மானத்தை பரந்தூரில் கொண்டுவராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு பரந்துருக்கு பதிலாக விவசாய நிலங்கள் இல்லாத வேறு இடத்தில் விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு பரந்தூரில் விமான நிலையத்தை தாண்டி திமுக அரசுக்கு வேறு ஏதோ லாபம் இருக்கிறது என்றும் கூறினார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, ஒரு வருடம் அன்னா  ஹசாரே போன்று விஜய் உண்ணாவிரதம் இருந்தாரா.? நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிவடைந்துவிட்டது. நாங்கள் மக்கள் பணியை சூரியன் உதிக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டோம். நடு இரவில்தான் மக்கள் பணி முடிந்து வீடு திரும்புகிறோம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை என்று கூறினார். மேலும் அன்னா  ஹசாரே போன்று விஜய் ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தாரா என அமைச்சர் சேகர்பாபு கூறியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.