பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா (94) காலமானார். 1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார். தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இறுதி சடங்கு இன்று மாலை 5.30க்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.