பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் ஜெட்பூரில் பிறந்த இவர் 1970 ஆம் ஆண்டு தும் ஹாசின் மாய் ஜவான்  என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.