தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழில் நடிக்க வந்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், தமிழில் நடிக்க வந்தபோது எதிர்காலம் பற்றிய பெரிய திட்டம் எல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன். இப்போது ரசிகர்கள் என்னை ஏற்றுகொண்டுவிட்டதால் நல்ல கதைகளாக தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.