மலையாள சினிமாவின் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் பகத் பாஸில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடிகை அபர்ணா பால முரளிக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில் குணச்சித்திர நடிகையான லீனா ஆண்டனி தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே 2 முறை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், தற்போது 3-வது முறையாக 10-ம் வம்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ள லீனா ஆண்டனி தன்னுடைய 73-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் அடுத்ததாக 11-ஆம் வகுப்பு படிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.