சோசியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அவர்கள் கணவன் மனைவி அல்லது காதலர்களாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாலிபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். அந்த பெண்ணும் வாலிபரை அடித்துள்ளார். உடனே அங்கு மக்கள் கூடுகின்றனர். இதனால் சிறிது நேரம் கழித்து இருவரும் ஒரே பைக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு சென்றனர். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.