தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற நெல்சன் தற்போது நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 70% நிறைவடைந்து விட்டதாகவும் கூடிய விரைவில் டீசர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தினமும் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் நடிகர் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருப்பதால் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து பார்த்து கவனமாக இயக்கி வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரஜினி இயக்குனர் நெல்சனுக்கு தைரியம் கூறியுள்ளாராம். அதாவது நடிகர் ரஜினி நம்பிக்கையுடன் இருங்கள். ஓடுகிற படம் கண்டிப்பாக ஓடும். உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.  இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் நன்றாக தான் இருக்கும் என்று தற்போதே பாசிட்டிவ் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். மேலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.