தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், கோல்டன் குளோப் விருதை தொடர்ந்து மேலும் இது சர்வதேச விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் போது டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசிய நிலையில் ஜேம்ஸ் கேமரூன் ராஜமவுலியிடம் நீங்கள் ஹாலிவுட்டில் படம் இருக்க விரும்பினால் என்னிடம் சொல்லுங்கள் அதைப்பற்றி நாம் பேசலாம் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.