தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகையை தினங்களை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அதன் பிறகு தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற இனிய நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் முன்னதாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து விதமான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.