தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி தமிழ் தாய் வாழ்த்து நேரலையில் காட்டாத நிலையில் அதற்கு அவ்வளவு தான் மரியாதையா என்று கேட்க சபாநாயகர் அதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியவில்லை என்று கூறினார். அதன் பிறகு கவர்னர் உரை போன்று அது இல்லை தமிழில் வாசித்த சபாநாயகர் உரை போன்று தான் இருக்கிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்ட நிலையில் ஏற்கனவே கவர்னர் உரையில் பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்கர் ஆகியோர் பெயர்களை அவர் வாசிக்காத நிலையில் அப்போது எதற்காக திமுக போராட்டம் நடத்தவில்லை என்றார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த முறை ஆளுநர் உரையை படிக்காமல் சென்றதால் தான் உடனடியாக அவரை எதிர்த்து போராட்டம் நடத்தினோம் என்றார். அதிமுக பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் சென்று தான் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூற அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். அதன்பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நீங்கள் கூறிய நிலையில் இதுவரை ஏன் ரத்து செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்க அதனை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது எனவும் இந்தியா கூட்டணி ஒருவேளை ஆட்சிக்கு வந்திருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கி இருப்போம். நீட் தேர்வு என்பது உங்கள் ஆட்சியில் தான் உள்ளே வந்தது என்று கூறினார்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பிள்ளையார் சுழி போட்டதே உங்கள் ஆட்சிதான் என்று கூறினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்தை கூற வேண்டாம் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்க்க தான் செய்தோம் அதனை உள்ளே வரவிடவில்லை என்றார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில் நீங்கள் நூற்றாண்டு நாணைய விழா நடத்திய போது பாஜக அமைச்சரைத்தானே அழைத்து வந்தீர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்க மத்திய மந்திரியை அழைத்து வெளியிட்டதில் என்ன தவறு என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள் என்று கூற முதல்வர் ஸ்டாலின் நாங்கள் நான்கு வேடம் போடுபவர்கள் என்றார். அப்போது குறிக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் அதிமுக எம்எல்ஏக்கள் என்றும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளதாக கூறினார்.