நடிகர் ஷைன் டாம் சக்கோ தன்னுடைய முதல் மனைவியை பிரிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான தனுஜாவை கரம் பிடிக்க இருந்தார்.
எட்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திருமணம் விரைவில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக அவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் டேட்டிங் ஆப் மூலமாக பெண் தேடும் வேலையில் இறங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.