தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”.

நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு உருவான இந்த திரைப்படம் 10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நிஜ சூப்பர் ஸ்டார் விஜய்யா? ரஜினியா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நயன்தாரா தான் நிஜ சூப்பர் ஸ்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.