இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே டிசம்பரில் 25 சதவீதம் வரை மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அகலம் இருக்கக்கூடும்.