தெலுங்கானா மாநிலம் கம்மம் என்னும் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் நாய்க்குட்டியை குளிப்பாட்டுவதற்காக வாட்டர் ஹீட்டர் இயந்திரம் மூலம் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் சூடாகி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை கையில் எடுத்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. இதனால் அவர் வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை கீழே வைப்பதற்கு பதிலாக அவரது கைக்குள் வைத்துள்ளார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவி அங்கு வந்து அருகில் உள்ளவர்களின் உதவியோடு மகேஷ் பாபுவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் மகேஷ்பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.