நாம் அனைவரும் இந்தியர்கள்…. பல மதங்களும், மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

நாம் அனைவரும் இந்தியர்கள் பல மதங்களும் மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை ஒன்றிணைத்துள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், 74 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியர்கள். பல மதங்களும், மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை, ஒன்றிணைத்துள்ளன. நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம். இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply