பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபுதேவா உடன் மின்சார கனவு திரைப்படத்தில் கஜோல்  நடித்து உள்ளார். வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள அவர், நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.