தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரகாஷ்ராஜ் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு திரைப்படத்தில் நடிகர் மோகன் நடித்திருப்பதாகவும் அது மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது. இது குறித்து நடிகர் மோகனிடம் கேட்டபோது, நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. இது முற்றிலும் வதந்தி என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் கதாபாத்திரங்கள் வாரிசு படத்தில் இன்னும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.